விடுதலை: நாளை வவுனியாவில் கவனயீர்ப்பு?


அனைத்து அரசியல்கைதிகளையும் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மேலும் புதிய தரப்புக்கள் பலவும் குரல் எழுப்ப தொடங்கியுள்ளது.

இது தொடர்பில் ஜனநாயக மாக்சிச லெனினிசக்கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்  “அரசியல் கைதிகள் மீதான வழக்குகள் யுத்தம் முடிவுற்று பதினொரு வருடங்கள் கடந்தும் விசாரணை செய்யப்படாமல் இருந்து வருகிறது. இது அப்பட்டமான நீதிமறுப்புச் செயற்பாடாகும்.


காலம்தாழ்த்தி வழங்கப்படும் நீதி – நீதி மறுப்புக்குச் சமனாகும் என்பதை அரசு கவனத்தில் கொள்ளல் வேண்டும் எனவும் அனைத்து அரசியல் கைதிகளையும் எதுவித நிபந்தனையும் இன்றி பொது மன்னிப்பளித்து விடுதலை செய்யுமாறும் கோருகின்றோம்.


அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாளை சனிக்கிழமை காலை 10 மணியளவில் வவுனியா பொது வைத்தியசாலை சுற்றுவட்டத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.


அரசியல் கைதிகளின் விடுவிப்பில் அக்கறையுள்ள அனைத்து தரப்பினரையும் கலந்து கவனயீர்ப்பை வலுவூட்டுமாறு கட்சி கேட்டு நிற்கின்றது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments