Genocide: ஏற்றுக்கொண்டார் சுமந்திரன் ?


தமிழ் இனப்படுகொலை நடந்ததை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் ஏற்றுகொண்டுள்ளார். 09/01/2021  அன்று  தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் நடைபெற்ற ஜெனிவா விடயத்தை ஒருமித்த கருத்துடன் எப்படி எதிர் கொள்வது எனும் மூன்றாவது கலந்துரையாடலின் போதே பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள்

இனப்படுகொலைக்கு நீதி  சர்வதேசத்திடம் நீதி  கோருவது என்ற விடயத்தைஏற்றுகொண்டுள்ளார் என கூட்டத்தில் கலந்துகொண்ட தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

 இதுவரை காலமும் Genocide என்பதனை ஏற்க மறுத்து 2009 இல் இடம்பெற்றமை இனப்படுகொலை அல்ல என கூறி  வந்த பாராளுமன்ற உறுப்பினர் நேற்றைய கூட்டத்தின் போது  தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகள் வடகிழக்கு சிவில் சமூகத்தினர் கருத்தியலாளர்கள் மதகுருக்கள் பாதிக்கப்பட்ட தரப்பினர்கள்

கலந்துகொண்ட கூட்டத்தில்  இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரல் விடயத்தை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் சமந்திரன் அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டு பின்வரும் தீர்மானத்தையும் ஏற்றுக்கொண்டனர்.

 பொறுப்பு கூறலை ஜெனீவாவுக்கு வெளியே கொண்டு செல்லல்,   ஐநா முன்மொழியக் கூடிய எந்த விசாரணை பொறிமுறையும் ஆதாவது அனைத்துலக பொறிமுறை (3IM) ஒரு கால எல்லைக்குள் இருக்க வேண்டும், இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி கோரல் போன்ற தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


No comments