பாலச்சந்திரனிற்கு போட்டுக்கொடுத்தனர்:டக்ளஸ்?



இந்திய மீனவர்களிற்கு எதிரான ஈபிடிபி ஆதரவு மீனவ அமைப்புக்களது போராட்டம் பிசுபிசுத்துப்போயுள்ளது.

இதன் பின்னணியில்  அரச அமைச்சர் டக்ளஸ் உள்ளமை தொடர்பில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைதூதர் பாலச்சந்திரன் தனது சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

டக்ளஸ் தேவானந்தாவை தொலைபேசியில் தொடர்புகொண்ட பாலச்சந்திரன் கடும் கண்டனத்தை  வெளிப்படுத்தியதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போது உரையாற்றிய டக்ளஸ் மீனவ சங்கத்திலுள்ள கறுத்த ஆடொன்று இந்திய தூதரிற்கு போட்டுக்கொடுத்துவிட்டதாக திட்டியிருந்தார்.

இதனையடுத்து மறுதலித்து டக்ளஸ் முனபதாக சம்மேளனத்தலைவர் டக்ளஸ் அழுத்தத்தால் ஆர்ப்பாட்டம் நடக்கவில்லையென மறுதலித்திருந்தார்.

சுமார் நூறு பேர் வரையில் பங்கெடுக்க ஊர்வலம் பண்ணையிலிருந்;து புறப்பட்டு யாழிலுள்ள இந்திய துணைதூதரகம் வரை சென்றிருந்தது.

இதனிடையே இலங்கை கடற்பரப்பினுள் நுழைகின்ற இந்தியக் கடற்றொழிலாளர்களை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளில் இலங்கை கடற் படையினரால் மேற்கொள்ளபப்பட்டு வருகின்ற நிலையில், நான்கு இந்தியக் கடற்றொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

அவர்களது புதைகுழிகளின் ஈரம் காயுமுன்னராக ஈபிடிபி பின்னணியில் இன்றைய ஆர்ப்பாட்டம் தூண்டப்பட்டு ஆதரவு ஈபிடிபி தரப்பினால் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments