வெடுக்குநாறிமலை விவகாரம்:பிணை அனுமதி?
வெடுக்கு நாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்குப்பிணை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்டிருந்த வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினர் மூவரையும் முன்னைய பிணையின்படியே விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இன்றையதினம் வழக்கு வவுனியா மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இன்றைய வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் வவுனியா சிரேஸ்ட சட்டத்தரணிகள் அன்ரன் புனிதநாயகம்,குருஸ், திருவருள், தயாபரன், யூஜின் ஆனந்தராசா உள்ளிட்ட பதினாறுக்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையாகி வாதிட்டனர்.
வழக்குத்தொடுனர்கள் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரமும் மன்றினால் நிராகரிக்கப்பட்டது.
அத்துடன் வழக்கு மீண்டும் மே மாதம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இன்றைய வழக்கை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மன்றில் பார்வையாளராக கலந்து கொண்டு பார்வையிட்டதாக ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Post a Comment