முத்துக்குமாருக்கு உலகெங்கும் நினைவேந்தல்!தியாகி முத்துக்குமாரின் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு  இன்றைய தினம் யாழ்ப்பாணத்தலும் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் தமிழாராய்ச்சி படுகொலை நினைவுத் தூபியில் நினைவு அஞ்சலி நிகழ்வுகள் இ;ன்று மாலை இடம்பெற்றது.

வன்னியில் யுத்தம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது 2009ஆம் ஆண்டு இலங்கையில் சிங்கள பேரினவாத அரசு நடத்திய தமிழினப்படுகொலையை நிறுத்த வலியுறுத்தியும்,  இனப்படுகொலைக்கு வல்லாதிக்க இந்திய அரசு துணைபுரிவதை கண்டித்தும் தியாகி முத்துக்குமார் சென்னையில தன்னைத் தானே தீயிட்டுக்கொண்டு உயிர்நீத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments