வெளியானது மாஸ்டர்:திரையரங்கங்களிற்கு பூட்டு?நீண்ட இடைவெளயின் பின்னராக திரையரங்கில் விஜய்யின் மாஸ்டர் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் தியேட்டர்கள் தொடர்ச்சியாக இழுத்து மூடப்பட்டுவருகின்றன.

அவ்வகையில் சுகாதார நடைமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் நகரிலுள்ள செல்வா திரையரங்கு சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டுள்ளது.


யாழ். போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள செல்வா திரையரங்கே இன்று நண்பகல் முதல் சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டது.கொரோனா தொற்று நிலைமைகள் காரணமாக நாட்டின் திரையரங்குகளில் இருக்கைகளின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் முழுமையான இருக்கைகளுக்காக பார்வையாளர்களை அனுமதித்து பற்றுச் சீட்டுக்களை விற்பனை செய்த குற்றச்சாட்டுக்காகவே இவ்வாறு திரையரங்கம் மூடப்பட்டுள்ளது.


No comments