ஜதேகவிற்கு புதிய செயலாளர்:இலங்கையில் புதிய கொரோனா?அரசியலில் உயிரிழந்த ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளராக பாலித்த ரங்கே பண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.


கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று(13) கூடிய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


அத்துடன், கட்சியின்  பிரதித்  தலைவராக   ருவன் விஜேவர்தன மற்றும் உப தலைவராக   அகிலவிராஜ் காரியவசம் தவிசாளராக வஜிர அபேவர்தன, பொருளாளராக ஏ.எஸ்.எம், மிஸ்பா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


இதனிடையே இலங்கையில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் டொக்டர் ஹேமந்த ஹேரத் இதனை கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.


எனினும், இதனை உறுதிப்படுத்த முடியாத  நிலையில் ஆய்வு கூட  பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், அறிக்கை கிடைத்தபின்னரே அதனை உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.


No comments