ரயிலில் வருவோர் கவனமாம்?
வடக்கு மாகாணத்துக்கான ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், வடக்குக்கு வரும் பயணிகள், அந்தந்தப் பிரதேசங்களில் சுகாதார பிரிவினருடன் தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ள  வேண்டுமென, வடக்கு சுகாதார  சேவைகள் பணிப்பாளர்  ஆ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், ரயில் மூலம் வடக்குக்கு   வருகின்ற பயணிகள், தங்கள் இடங்களுக்கு வந்தப் பின்னர்,  உடனடியாக அந்தந்தப்  பிரதேசத்தில் உள்ள சுகாதார பிரிவினருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.

No comments