உப்புவெளி பிரதேசசபை:இரா.சம்பந்தன் ராஜினாமா!திருமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையில் புதிய ஆட்சியை உருவாக்கியதன் மூலம் ஈ.பி.டி.பி. மீண்டும் திருகோணமலையில் தனது ஆதிக்கத்தினை நிலைநாட்டியுள்ளதாக அதன் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதனிடையே  ஈ.பி.டி.பி மற்றும் வரதர் அணியினரால் தமிழர்களிடம் இருந்த ஆட்சி பறிக்கப்பட்டு சிங்களவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தரப்புக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 11 பிரதேச சபைகளில் இரண்டு சபைகள் மட்டுமே தமிழ்களிடம் இருந்து வந்திருந்த நிலையில் அதிலும் ஒன்று சிங்களவர்களின் கைகளில் போயுள்ளது.மீதி ஒரு சபை மட்டுமே தமிழ்மக்களிடம் உள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த பிரதேச சபையினால் வினைத் திறனாக மக்கள் நலச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை என்று பிரதேச மக்களினால் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் ஈ.பி.டி.பி. கட்சியினால் குறித்த ஆட்சி மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டக்ளஸ் விளக்கமளித்துள்ளார்.

மத்திய அரசாங்கத்துடன் காணப்படும் நல்லுறவை பயன்படுத்தி பிரதேச மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் வகையில் எஞ்சிய காலப் பகுதி பயன்படுத்தப்படவுள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

ஆயிம் 75 வீதம் தமிழ் பேசும் மக்கள்  தொகையைக் கொண்ட ஒரு சபையில் ஒரு தமிழ் பேசும் நபரே தலைவராக இருக்கவேண்டும்.

உப்புவெளி பிரதேச சபையினை பறிகொடுத்தற்கான தார்மீக பொறுப்பை பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும்; திருகோணமலை மாவட்ட தமிழரசு கட்சியினர் பொறுபேற்று தமிழ் மக்களிடம் மன்னிப்பு கோரி தங்களின் பதவிகளையும் துறக்கவேண்டும் என்ற கோசம் வலுத்துள்ளது.

2010 ம் ஆண்டு  தொடர்க்கம் ஐ தே கட்சியினருக்கு தமிழ் தேசிய கூட்டமைபு சகல விதமான ஆதரவுகளையும் வழங்கி வரும் போது  ஐ தே கட்சியை சேர்ந்த  மூன்று உறுப்பினர்களில் இரண்டு உறுப்பினர்கள் ஆளும்  கட்சியான பொதுஜன பெறமுன கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள் 


No comments