ஜெய்சங்கர் படத்தில் டக்ளஸ்?இலங்கை இந்திய மீனவர்கள் விவகாரம் தொடர்பில் இந்திய வெளி விவகார அமைச்சர்; ஜெயசங்கர் உடன்; இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து பேசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்திய வெளிவிகார அமைச்சருடான  சந்திப்பு இன்று புதன்கிழமை மாலை நடைபெற்றிருந்தது.

இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள இந்திய வெளி விவகார அமைச்சர் கூட்டமைப்பின் தலைவர்களுடன் சந்திப்பிi நடத்தியிருந்தார்.

இதன் பின்னராக இந்திய வெளி விவகார அமைச்சர் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து  இந்திய மற்றும் இலங்கை  கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியிருந்தனர்.கலந்துரையாடலின் பிரகாரம் தீர்க்கமா முடிவு எட்டப்பட்டுள்ளதாக டக்ளஸ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வாக 13வது திருத்த சட்டத்தை அமுல்படுத்த இந்திய வெளிவிவகார அமைச்சருடன் பேசியிருந்ததாகவும் டக்ளஸ் தெரிவித்துள்ளார்.No comments