விமானப்படை வாத்தியார்கள்:வவுனியாவில் காத்திருப்பு?வவுனியாவில்; உள்ள பாடசாலைகளில் உள்ள ஆங்கில ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய விமானப் படையைக் கொண்டு கற்பிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை பிழையான செயல். அதாவது  மியன்மார் நிர்வாகத்தைப் போல ஒரு இராணுவ ஆட்சியை நோக்கி நகர்வதற்கான செயற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கின்றதென தெரிவித்துள்ளார் வடமாகாணசபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம்.

இதனிடையே இலங்கை விமானப்படையினரை பாடசாலை ஆசிரியர்களாக இணைத்துக்கொள்வதற்கு எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்று இலங்கை கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

விமானப்படையினரை பின்தங்கிய பிரதேச பாடசாலைகளில் ஆசிரியர்களாக இணைத்துகொள்ளப்பட்டிருப்பதாக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளமைக்கே இலங்கை கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பதிலளித்துள்ளார்.  


No comments