வவுனியாவில் நினைவேந்தப்பட்ட ஆழிப்பேரலை நிகழ்வுகள்

வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுகழக மைதானத்தில் அமைந்துள்ள சுனாமி நினைவு தூபியில் ஆழிப்பேரலையின் 16 ஆம் ஆண்டு

நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

நகரசபை தலைவர் இ.கௌதமன் தலைமையில் இடம்பெற்ற   நிகழ்வில் மதகுருமார்கள், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், கு.திலீபன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சிவநாதன் கிசோர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், நகரசபை உறுப்பினர்கள், நரசிங்கர் ஆலயத்தின் தலைவர் கோ.சிறிஸ்கந்தராயா, நிர்வாகத்தினர், தமிழருவி சிவகுமாரன், பொதுஅமைப்புகள், பூந்தோட்டம் கிராமமக்கள்,  சமூக ஆர்வலர்கள், என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
No comments