கட்சி தாவியதால் விவாகரத்து கேட்க்கும் கணவன்!

இந்தியாவின் மேற்குவங்க பாஜக முகாமில் இருந்து திரிணாமுல் கட்சிக்கு மாறிய தனது மனைவி சுஜாதா மொண்டல் கானுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்புவதாக பாஜக எம்.பி. சௌமித்ரா கான் தெரிவித்துள்ளார்.

தனது மனைவியின் நடவடிக்கையால் கோபமடைந்த சௌமித்ரா கான், சுஜாதாவுக்கு விவாகரத்து அறிவிப்பை அனுப்பப்போவதாகக் கூறினார். மேலும் தனது குடும்பப் பெயரை இனி பயன்படுத்த வேண்டாம் என்று வலியுறுத்தினார்.

No comments