தூய தமிழ்த்தேசியவாதி அதிமுகவில் இணைந்தார்!


நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த கல்யாணசுந்தரம் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் தங்களை தூய நேர்மையான தமிழ்தேசியவாதிகளாக காட்டி சீமானிடம் குறைகள் இருப்பதாக கூற கருத்து மோதல் போக்கு உருவானது. தன்னை சிறந்த கருத்தாளனாகக் காட்டி ஊடங்களில் பேசி தனக்கென ஒரு கூட்டத்தையும் சேர்க்க முயற்சித்தார் , அனினும் தலைமைக்கு அது தெரிய வரவே  இந்த மோதல் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், தனது சாவை எதிர்நோக்கியிருந்தவர் கல்யாணசுந்தரம் என சீமான் வெளிப்படையாக அறிவித்தார்.

இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு கல்யாணசுந்தரம்  நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகினார்.கடந்த சில மாதங்களாக எந்த கட்சி நடவடிக்கைகளிலும் ஈடுபடாமல் இருந்து வந்த கல்யாண சுந்தரம் தனிக் கட்சி தான் ஆரம்பிக்கவுள்ளதாக ஆரம்ப காலங்களில் தெரிவித்து வந்தார்,  எனினும் அதிமுகவில் இணைய இருப்பதாக அண்மையில் தகவல் வெளியாகியது. இந்த நிலையில், சென்னையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் முன்னிலையில், அவர் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

 

No comments