பிரித்தானியாவில் வீரியப் பரிமாணம் அடைந்த கொரோன! கனடா மக்களுக்கு விடுத்த அவசர எச்சரிக்கை!


பிரிட்டனில் தெற்கு இங்கிலாந்து பகுதியில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதையடுத்து அந்நாட்டில் இருந்து வரும் விமானங்களுக்கு கனடா தடை விதித்துள்ளது.

பிரிட்டனில் தெற்கு இங்கிலாந்து பகுதியில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருவதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளை பிரிட்டன் அரசு விதித்துள்ளது.

புதிய கொரோனா வைரஸ் அச்சத்தால் பெல்ஜியம், இத்தாலி, நெதர்லாந்து, ஜெர்மன் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளும் பிரட்டனுக்கு விமானப் போக்குவரத்தை நிறுத்திவிட்டன.

புதிய வைரஸ் கட்டுப்பாட்டை மீறி இருப்பதால், மக்கள் வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

தற்போது பரவிவரும் கொரோனா வைரஸ், முந்தைய கொரோனா வைரசை விட வித்தியாசமாதாக இருந்தது.

இந்த கொரோனா வைரஸ், சூழ்நிலைக்கு ஏற்றார்போல வளர்சி மாற்றம் அடைந்திருந்ததை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

புதிய வகை கொரோனா வைரஸ் பழைய வைரசின் பாதிப்பு சக்தியை கொண்டிருந்தபோதும், பழைய கொரோனா வைரசை காட்டிலும் இந்த புதிய கொரோனா வைரஸ் வேகமாக பரவும் தன்மை உடையதாக இருப்பதும் தெரியவந்தது.

இந்நிலையில், வளர்சிதை மாற்றம் அடைந்து புதியவகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அடுத்த 72 மணி நேரத்திற்கு, இங்கிலாந்து விமானங்கள் அனைத்தும் கனடாவுக்குள் நுழைய தடை விதிக்கப்படுவதாக பிரதமர் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிவிப்பில், நான் Incident Response குழுவுடன் ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்தேன். பிரிட்டனில் அடையாளம் காணப்பட்ட கோவிட்-19 வைரஸின் புதிய மாறுபாட்டில் கவனம் செலுத்தியுள்ளோம்.

உங்களையும் நாடு முழுவதும் உள்ள மக்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க நாங்கள் புதிய எல்லை கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த முடிவு செய்துள்ளோம்.

அடுத்த 72 மணி நேரத்திற்கு, இங்கிலாந்து விமானங்கள் அனைத்தும் கனடாவுக்குள் நுழைய தடை விதிக்கப்படும். இன்று வந்த பயணிகள் இரண்டாம் நிலை திரையிடலுக்கு உட்பட்டு மேம்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் தொடரும்” என்று கூறியுள்ளார்.

 

 

 

No comments