5 படகுகளுடன் 36 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட ஐந்து (05) இந்திய மீன்பிடிப் படகுகளில் இருந்து 36

இந்திய மீனவர்கள் மற்றும் பல மீன்பிடி பொருட்களுடன் நேற்று செவ்வாய்க்கிழமை (2020 டிசம்பர் 15) கைது செய்யப்பட்டன.

கோவிட் -19 தொற்றுநோய் காரணத்தினால் இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் வெளிநாட்டு மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து குறைக்கப்பட்டாலும் இலங்கை கடல் பகுதியில் வெளிநாட்டு மீனவர்கள் தொடர்ந்து மீன்பிடிப்பதையும், உள்ளூர் மீன்பிடி சமூகத்திற்கு ஏற்படும் பாதிப்பையும் கருத்தில் கொண்டு, இலங்கை கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் வெளிநாட்டு மீன்பிடிப் படகுகள் கைது செய்யும் நடவடிக்கைகள் கடற்படை மீண்டும் தொடங்கியுள்ளது.

அதன்படி, வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் நெடுந்தீவு அருகில் உள்ள கடல்பகுதில் ஒரு சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டதுடன், இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று (03) இந்திய மீன்பிடிப் படகுகளுடன் இந்திய மீனவர்கள் 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

மேலும், வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் மன்னார் வடக்கு கடல் பகுதியிலும் வட மெற்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினர் குதிரமலை மேற்கு கடல் பகுதியிலும் மெற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு (02) இந்திய மீன்பிடிக் படகுகளுடன் இந்திய மீனவர்கள் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த சிறப்பு நடவடிக்கைகள் மூலம் கைது செய்யப்பட்ட, 05 இந்திய மீன்பிடிப் படகுகள் மற்றும் இந்திய மீனவர்கள் 36 பேர் குறித்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கிடையில், கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.






No comments