கருணாவுக்கு பாடம் கற்பிப்பேன்: பிள்ளையான் சவால்?

எதிர்வரும் மாகாண சபை தேர்தலில், தமிழ் மக்கள் விடதலைப் புலிகள் கட்சி தனது பலத்தை உறுதிப்படுத்திக்கொண்டு, என்னையும் எமது கட்சியையும்

அழித்துவிடவேண்டுமெனக் கங்கணம் கட்டிக்கொண்டுள்ள சில தலைவர்களுக்கு பாடம் புகட்டுவேன்” என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.


“நான் மக்களுடன் எந்தத் தொடர்பும் இல்லாத நிலையிலும் வாக்களித்து மக்களுக்கு சேவையாற்ற சந்தர்ப்பத்தை வழங்கிய மக்களுக்கு நன்றியினையும் அவர் தெரிவித்துள்ளார்.


மாகாணசபை தேர்தல் அறிவிப்பு வெளியாகலாமென்ற எதிர்பார்ப்பின் மத்தியில் கருணா கிழக்கு முதலமைச்சர் கதிரையினை இலக்கு வைத்துள்ளார்.

இந்நிலையில் பிள்ளையானின் அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments