இலங்கை மரணம்:157 இனால் அதிகரித்தது?

 


கொரோனா தொற்றில் தப்பித்திருந்த வடக்கை இலக்கு வைத்து தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இலங்கையில் மேலும் மூவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது.

கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயது பெண் ஒருவரும், கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 85 வயது ஆண் ஒருவரும் மற்றும் கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 84 வயது ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்தனர். 


No comments