யானைக்கு வைத்த மின்கம்பி! திருகோணமலையில் இளைஞன் பலி!


திருகோணமலையில் யானைக்கு வைத்த மின் கம்பியில் இளைஞன் ஒருவர் சிக்கிப் பலியாகியுள்ளார்.

திருகோணமலை பன்குளத்தில் நேற்றிரவு 11.30 மணியளிவில் இடம்பெற்றது.

உயிரிழந்தவர் மட்டக்களப்பு காந்திநகர் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய பரந்தாமன் கிருஷாந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பன்குளம் 6ஆம் வாய்க்கால் பகுதியில் அவரின் தாயின் தங்கையின் (சித்தி) வீட்டில் வேலைக்காக சென்றிருந்த போது இச்சம்பவம் இடம்பெற்றிருந்தது.

No comments