பறிபோனது முதல்வரின் பதவி!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ம் ஆண்டுக்கான பாதீடு 2 வது முறையாகவும் 3 வாக்குகளால்


தோற்கடிக்கப்பட்டுள்ளது.  பாதீட்டு திட்டத்துக்கு ஆதரவாக 21 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 03 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணியின் உறுப்பினர் ஒருவரும்,  சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவரும் வரவு - செலவுத் திட்டத்திக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 13 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜன நாயகக் கட்சியின் 10 உறுப்பினர்களும்,  சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் ஒருவரும் வரவு - செலவுத் திட்டத்திக்கு எதிராக வாக்களித்தனர்.

பாதீடு இரண்டு முறை தோல்வியடைந்தால் யாழ் மாநகரசபை முதல்வர்  பதவி விலக வேண்டும் என்பது சட்ட விதி ஆகும்

No comments