நல்லூர் முன்னணிக்கு?


நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக தமிழ் தேசிய மக்கள் முன்னணியை சேர்ந்த  பத்மநாதன் மயூரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். 

நல்லூர் பிரதேச சபையின் புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு  வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலைமையில் இன்று (30) இடம்பெற்றது.

அதன் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் குமாரசாமி  மதுசூதனும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் பத்மநாதன் மயூரனும் முன் மொழியப்பட்டனர். 

தொடர்ந்து வாக்கெடுப்பு பகிரங்கமாக நடைபெறுவதா அல்லது இரகசியமாக நடைபெறுவதா என உறுப்பினர்களிடத்தில் வாக்கெடுப்பு இடம்பெற்றது.

சபை உறுப்பினர் அனைவரும் பகிரங்க வாக்கெடுப்பு கோரியதால், தவிசாளர் தெரிவு பகிரங்க வாக்கெடுப்பு மூலம் இடம்பெற்றது.

அதனை அடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பில் , குமாரசாமி மதுசூதனன் 08 வாக்குகளையும் , பத்மநாதன் மயூரன் 10 வாக்குகளையும் பெற்றனர். 

அதன் அடிப்படையில் புதிய தவிசாளராக பத்மநாதன் மயூரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.  

No comments