மணிவண்ணனை ஆதரித்த 10 மாநகர உறுப்பினர்களும் நீக்கப்படுவர் - கஜேந்திரகுமார்


எமது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வி.மணிவண்ணனை ஆதரித்து, கட்சியின் கொள்கைக்கு துரோகம் செய்த யாழ்ப்பாணம் மாநகர சபையின் 10

உறுப்பினர்களும் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று (30) சற்றுமுன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மணிவண்ணனை ஆதரித்ததன் மூலம் கட்சியின் கொள்கைக்கு துரோகம் இழைத்து, யாழ்ப்பணம் மாநகர சபையின் எமது கட்சியை பிரதிநித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் பத்துப்பேர் டக்ளஸ் தேவானந்தாவுடன், கைகோர்த்து கட்டிப்பிடித்துக் கொண்டுள்ளனர். அவர்களை எமது இயக்கத்தில் இருந்து நீக்குவோம் என்றும் அவர் தெரிவித்தார்.

No comments