கொள்கையல்ல என்கிறார் டக்ளஸ்?

கட்சி ரீதியாக அல்லாமல், செயற்பாட்டாளர் என்ற அடிப்படையில் வி.மணிவண்ணனுக்கு யாழ். மாநகரசபை மற்றும் நல்லூர் பிரதேசசபைகளில்

ஆதரவை வழங்கினோம் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ் மாநகரசபை மற்றும் நல்லூர் பிரதேசசபைகளில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸி;ன் வி.மணிவண்ணன் அணி, ஈ.பி.டி.பியின் துணையுடன் இன்று ஆட்சியமைத்தது.

“நாம் கட்சி ரீதியாக சிந்திக்கவில்லை. மக்கள் நலன் சார்ந்து சிந்தித்தோம். மாநகரசபை நிர்வாகம் கலையும் அபாயமிருந்தது. அதனால் இரண்டு சபைகளிலும் செயற்பாட்டாளர்களை ஆதரிக்க முடிவெடுத்தோம்.

சிறப்பான வரவு செலவு திட்டமொன்றை தயாரித்து மககளிற்கு வழங்குவதே எமது நோக்கம்.

எமது உள்ளூராட்சி அலகுகளை பாதுகாக்கவும், மக்களிற்கு தேவையான திட்டங்களை மேற்கொள்ளவும் நாம் வாக்களித்தோம்“ என்றார்.

இதனிடையே வி.மணிவண்ணனை கட்சியிலிருந்து நீக்கியமைக்கான காரணம் இப்போது அனைவருக்கும் தெரிந்திருக்கும் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அன்று மணிவண்ணனை கட்சியிலிருந்து நீக்கிய போது அவரைப்பார்த்து பயந்துதான் இந்த முடிவு எடுத்ததாக அவர் உட்பட பலர் தெரிவித்திருந்தனர்.

அதற்கு நாங்கள் பதிலை மக்களிடம் தெரிவித்திருந்தோம், “மணிவண்ணன் கொள்கையோடு இல்லை. அவர் மற்றையவர்களுடைய நிகழ்ச்சி நிரலுக்குள் சென்றுவிட்டார்.

விசேடமாக இனத்தைக் காட்டிக்கொடுப்பவர்களுடன் ஒன்றுபட்டுவிட்டார்” என்பதை நாங்கள் மக்களுக்கு அறிவித்திருந்தோம்.

இவ்வாறான நிலையிலேயே அன்று அவரை கட்சியிலிருந்து நீக்கினோம் என்றார்.

இதற்கு காலம் பதில் சொல்லும் என்று அன்று நாம் தெரிவித்திருந்தோம்.

இன்று மணிவண்ணனை டக்ளஸ் தேவாநந்தா கட்டியணைத்துக்கொண்டார். இது ஆச்சரியமிக்க விடயம் இல்லை.

மேலும் டக்ளஸ_டன் பேச்சு நடத்திய அனைவரும் எமது கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள். விரைவில் இதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

No comments