தடையில்லையென்கிறார் தவிசாளர்?

 


மக்களின் அபிவிருத்திகளை தடுக்கும் நோக்கம் தனக்கு இல்லை எனவும் அவ்வாறு நோக்கம் இருந்தால் சபை அனுமதி பெறப்படாமல் பெயர்ப்பலகை நாட்டப்பட்ட விதிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருப்பேன்  என வலி கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார் .

யாழ் ஊடக அமையத்தில்  செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் வலி கிழக்கு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட குறித்த வீதி உடன் அமைக்கப்படுவது தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை எனவும் ஆனால் சபையின் அதிகாரங்களுக்கு உட்பட்டு உரிய அனுமதி பெறப்படாமல் பெயர்ப்பலகை நாட்டியதன் காரணமாக சபையின் அனுமதியுடன் குறித்த பெயர் பலகையை பக்குவமாக கழட்டினேன்.

அரசாங்கத்தின் வீதி புனரமைப்பு திட்டங்கள் மக்களுக்கு உரிய வகையில் சென்றடைவதற்கு மக்கள் சபை என்ற நீதியில் அனைத்து பங்களிப்புகளையும் வழங்கி வருகிறோம்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் கம்பரலிய திட்டத்தின் மூலம் அபிவிருத்தி செய்யப்படவிருந்த வீதிகள் சில அப்போதைய ஆட்சி குழப்பத்தின் காரணமாக நான் எனது அதிகாரத்தைப் பயன்படுத்தி குறித்த வீதிகளின் பெயர்களை பரிந்துரை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது.

ஏனெனில் அப்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் பங்கு பற்றிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட 300 மில்லியன் ரூபா வில் முதற்கட்ட நிதியாக 100 மில்லியன் ரூபா வழங்கப்பட்டது.

ஆட்சி குழப்பம் ஏற்பட்டது காரணமாக குறித்த நிதி திரும்பி விடுமோ என்ற அச்சத்தின் காரணமாக உடனடியாக சில விதிகளை பரிந்துரை செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது.

ஆனால் தற்போது நிலையான அரசாங்கம் அமைந்துள்ள நிலையில் அவ்வாறான தேவைகள் எதுவும் ஏற்படக்கூடிய சூழல் இல்லாத காரணத்தினால் முறையான அனுமதிகளை பெற முடியும்.

தற்போதைய அரசாங்கத்தில் ஊர் எழுச்சி திட்டம் மூலம் பரிந்துரை செய்யப்பட்ட வீதிகளை அங்கஜன் இராமநாதன் பட்டியல் படுத்தியிருந்தார்.

யார் செய்தாலும்மக்களுக்கான அபிவிருத்தி அதை நாம் ஒருபோதும் தடுக்க போவதில்லை இருந்து வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் சபை அனுமதிக்காக அனுப்பப்பட்ட வீதிகள் வலி கிழக்கு பிரதேச சபையில் எங்கு அமையப் பெற்றிருக்கிறது அல்லது பிரதேசத்தின் கிராமசேவையாளர் பிரிவு எவையேனும் போடப்படாமல் எமக்கு அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

தவிசாளர் என்றவகையில் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்படும் கடிதங்களை சபையில் போட்டேன் உறுப்பினர்கள் குறித்த அனுமதி  தொடர்பில் தெளிவு இல்லாமல் இருக்கிறது என தெரிவித்தார்கள் .

அவ்வாறே அச்செளு வீதியை புனரமைக்க சபை அனுமதி பெறாத  நிலையிலும் குறித்த வீதியை  புனரமைக்க அனுமதி பெறுமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு எழுத்து மூலம் தெரிவித்திருந்தேன்.

ஆனாலும் அவர்கள் உரிய காலப் பகுதியில் குறித்த கடிதத்திற்கு பதில் வழங்காத நிலையில் குறித்த பெயர்ப்பலகையை சபையின் யாப்பு விதிகளுக்கு உட்பட்டு கழற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது.

கடந்த 4 ஆம் திகதி பெயர்ப்பலகைக கழற்றப்பட்டதன் பின்னர் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால்  சபை அனுமதி கோரிய கடிதம் கிடைக்கப் பெற்றது.

ஆகவே எமது சபைக்கு அனுப்பப்படும் எத்தகைய பொதுமக்கள் வேலைத்தட்டமாக இருந்தாலும் கூடியவரை மக்களுக்குப் பயன்படக்கூடிய வகையில் பெற்றுக்கொடுப்பதற்கு கட்சி அரசியலுக்கு அப்பால் செயற்படத் தயாராக உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்

No comments