எல்.இ.டி மின் விளக்குகள் கொரோனா வைரஸினை அழிக்கிறது!


புற ஊதா ஒளியை வெளிப்படுத்தும் எல்.இ.டி விளக்குகள் மூலம் கொரோனா வைரஸைக் கொல்ல முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகையே புரட்டிப் போட்டிருக்கும் கொரோனா வைரஸை ஒழிக்க தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

அதன்படி அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு தொடர்பான அறிக்கை, “Photochemistry and Photobiology B: Biology” என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், புற ஊதா ஒளியை வெளிப்படுத்தும் எல்.இ.டி விளக்குகளைப் பயன்படுத்தி கொரோனா வைரஸைக் கொல்வது மிகவும் எளிது என்பதை கண்டுபிடித்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மலிவாக மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய எல்.இ.டி விளக்குகளைப் பயன்படுத்தி கொரோனா வைரஸைக் கொன்றதாக ஆய்வாளர்கள் கூறியிருக்கின்றனர்.

இந்த வகை விளக்குகள் குறைந்த அளவிலான சக்தியை நுகர்வதும், வழக்கமான விளக்குகளைப் போல பாதரசத்தை கொண்டவை அல்ல என்பதும் சாதகமான அம்சங்கள் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கின்றது.

 

No comments