மூடப்பட்டதா வடமாகாண சுகாதார அமைச்சு?



கொரோனா தொற்று அச்சத்தில் வடமாகாண சுகாதார அமைச்சு மற்றும் வடமாகாண சுகாதார திணைக்களம் என்பவை மூடப்பட்டுள்ளன.சாரதியொருவரது நண்பரிற்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இதனிடையே மருதனார்மடம் பொதுச் சந்தை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையோரில் மேலும் 15 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இ;ன்று செவ்வாய்;க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது..

அனைவரும் சந்தை வியாபாரிகளுடன் நேரடித் தொடர்புடையவர்கள் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளாhர்.

தெல்லிப்பழையைச் 6 பேருக்கே கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளது.இதன்மூலம் மருதனார்மடம் கொரோனா வைரஸ் கொத்தணியின் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 58ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே மருதனார்மடம் பொதுச் சந்தையில் கொரோனா வைரஸ் கொத்தணியுடன் தொடர்புடையோரிடம் கடந்த சனிக்கிழமை பெறப்பட்ட மாதிரிகளில் அனுராதபுரத்தில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அநுராதபுரம் வைத்தியசாலை ஆய்வுகூடத்துக்கு கடந்த சனிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்ட 114 வியாபாரிகளின் மாதிரிகளில் இன்று செவ்வாய்க்கிழமை 13 வியாபாரிகளுக்கு தொற்று உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உடுவிலைச் சேர்ந்த 6 பேரும் தெல்லிப்பழையைச் சேர்ந்த 3 பேரும் நல்லூர், சண்டிலிப்பாய் ஆகிய சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளைச் சேர்ந்த தலா 2 பேரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டது.


No comments