ஏன் இந்த நெருப்பு?பொருளாதார, அரசியல் நெருக்கடிகள் மற்றும் கோவிட்-19 வைரஸால் தீவிரமடைந்துள்ள பதட்டங்களுக்கு மத்தியில் குற்ற வழக்குகளில் இருந்து தங்களையும் தங்கள் சகாக்களையும் விடுவித்து கொள்ள ராஜபக்சே குடும்பம் கடுமையாக முயற்சி செய்து வருகிறது . அந்த வகையில் கார்த்திகை மாதம்  19 ஆம் திகதி முதல்  24 ஆம் திகதி வரையான 5 நாட்களில் மட்டும் பல வழக்குகளில் இருந்து ராஜபக்சே குடும்பத்தின் சகாக்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் நீதிமன்ற கட்டட வளாகம் தீப்பற்றியெரிவது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ளார் சமூக பதிவளார் ஒருவர்

அவற்றில் சில, 

19 நவம்பர் 2020 காலை: மகிந்த ராஜபக்சே  அவர்களின் சகாக்களான திரு அனுஷா பெல்பிதா, திரு லலித் வீரதுங்க ஆகியோர் ரூபா  600 மில்லியன் அரசாங்க நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டுகளிலிருந்து நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர் 

19 நவம்பர் 19 மாலை: ரூ .1 பில்லியன் வரி மோசடி காரணமாக சீல் வைக்கப்பட்ட அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அவர்களின் மதுபான தொழிற்சாலை உரிமம் எந்த தண்டணையும் இன்றி மீள ஒப்படைக்கப்பட்டது 

20 நவம்பர் 20 காலை: அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன்  மீதான இரண்டு வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் நீதிமன்றத்தால் இரத்து செய்யப்பட்டன 

20 நவம்பர் 2000 மாலை: இலங்கை உர கூட்டுத்தாபனத்தின்  தலைவர் ரூ .20 மில்லியன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டார்

23 நவம்பர் 2000 காலை : ரூ .2991 மில்லியன் மோசடி  செய்த வழக்கில் விதிக்கப்பட்டு இருந்த பசில் ராஜபக்சே அவர்கள் மீதான நீதிமன்றம் விதித்த  பயணத் தடை நீக்கப்பட்டது

24 நவம்பர் 2000 காலை: பல மோசடி வழக்குகளில் தொடர்புடைய  ஊடக வலையமைப்பின் தலைவர் திலீத் ஜெயவீரா பொது சேவை ஆணைகுழுவின்  உறுப்பினராக நியமிக்கப்பட்டார்

24 நவம்பர் 2000  நண்பகல்: இராஜபக்சே குடும்பத்தின் கொந்தராத்து கொலைகள் , கடத்தல்கள் புரிந்த பிள்ளையன் பிணையில் விடுவிக்கப்பட்டார்

24 நவம்பர் 2000  நண்பகல்: லலித்-குகன் வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம் கோத்தபாயா ராஜபக்சே மீதான  சம்மனை நீதிமன்றம்  ரத்து செய்து இருந்தது .

இந்த சம்பவங்களின் பிண்ணனியில்  கொழும்பு உயர் நீதிமன்ற கட்டட தொகுதி   தீ பிடித்து எரிந்து கொண்டு இருக்கிறது.  எதிர்வரும் காலங்களில் மேலும் பல வழக்குகளில் இருந்து ராஜபக்சே குடும்ப சகாக்கள் விடுவிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உருவாக்க படுகின்றனர்


No comments