முல்லைதீவில் மீண்டும் போராட்டம்?



இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் இந்திய மீனவர்களுக்கு எதிராக முல்லைத்தீவு மீனவர்கள் நாளை போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

அண்மைக்காலமாக முல்லைத்தீவு கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய செயல்பாடுகள் அதிகரித்துள்ளன.

இதுதொடர்பில் கடல்தொழில் அமைச்சு மற்றும் கடற்படையினர் எனப் பல்வேறு தரப்பினரிடமும் முறையிட்டிருந்தபோதும் இதுவரை எந்ததொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் கடந்த 12ஆம் திகதி மீனவர்கள் தாமே முன்வந்து, இந்திய இழுவைப் படகுகளை முல்லைத்தீவு கடற்பரப்பிலிருந்து விரட்டுவதற்கு படகுகளில் கடலுக்கு செல்லத் தயாராகியிருந்தனர்.

இதன்போது அங்கு வருகை தந்த முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் மற்றும் மாவட்ட கடல்தொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகள், இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகை தொடர்பான பிரச்னையை உரியவர்களுக்குத் தெரியப்படுத்தி இன்று திங்கள்கிழமைக்குள் தீர்வு பெற்றுத்தருவோம் என்று உறுதியளித்தனர்.

இருப்பினும் இதுவரை இந்தப் பிரச்னை தொடர்பில் எந்ததொரு நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை.

இந்நிலையிலேயே இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.

எனவே இந்தப் போராட்டத்திற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

No comments