தங்கம் கடத்திய ஐவர் கைது! 9.7 கிலோ தங்கம் பறிமுதல்


இலங்கையிலிருந்து இந்தியாவிற்கு 9.7 கிலோ கிராம் தங்கம் கடத்தி செல்லப்பட்டுள்ள நிலையில் ஐந்து பேர் இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்தியாவில் தூத்துக்குடி வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இன்று அதிகாலை மன்னார் வளைகுடா கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

இதன்போது சந்தேகத்திற்கிடமாக நின்றுகொண்டிருந்த படகில் இருந்த மண்டபம் மரைக்காயர்பட்டிணம் பகுதியை சேர்ந்த நபரை கடலோர காவல் படையினர் சோதனை செய்தனர்.

அப்போது அவரது உடம்பில் மறைத்து வைத்திருந்த சுமார் பல இலட்சம் மதிப்பிலான 9 கிலோ கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் அவருடன் இருந்த நால்வர் என மொத்தம் ஐந்து பேரை கைது செய்த இந்திய கடலோர காவல் படையினர், கடத்தலுக்கு பயன்படுத்திய படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments