காவல்துறையின் அச்சுறுத்தல்! சிவாஜி கண்டனம்!


வடமராட்சி உடுப்பிட்டிப் பகுதியில் பொதுமகள் ஒருவருக்கு காவல்துறையினரால் துப்பாகிமுனையில் அஞ்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற, மாகாணசபை உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் ஊடகத்திற்கு வழங்கிய கருத்துகள்:-

சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று கேள்விக்குறியாக்கிய சம்பவம் வடமராட்சி உடுப்பிட்டியில் நடைபெற்றிருக்கிறது. சுட்டுக்கொல்லுவேன் என்றளவுக்கு இலங்கை அரச படைகளுக்கும் காவல்துறையினருக்கும் அத்துமீறிய அதிகாரத்தைக் கொடுத்தது யார் என்ற கேள்வி எழுகிறது.

அவகளுடைய மனோபாவம் தமிழர்கள் என்றால் கிள்ளுக்கீரைகள் எங்களை எதுவும் செய்யலாம், எந்த விசாரணைகளுகம் இருக்காது. காப்பாற்றப்படுவோம் என்ற நிலைமைதான் இருக்கிறது. இவ்வாறான கூற்றையே அந்த காவல்துறை அதிகாரி கூறியிருக்கிறார் என்பது நிரூபணம் ஆகின்றது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம் என சிவாஜிலிங்கம் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments