தரைதட்டிய உல்லாசக் கப்பல்! 400க்கு மேற்பட்டோர் பாதுகாப்பாக மீட்பு

பின்லாந்து நாட்டில் இருந்து ஸ்வீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரை நோக்கி வைகிங் கிரேஸ் என்ற பயணிகள் கப்பல் புறப்பட்டு சென்றுள்ளது.  அதில், 331 பயணிகள் மற்றும் 98 சிப்பந்திகள் இருந்துள்ளனர்.

கப்பல் பின்லாந்து நாட்டுக்கு உட்பட்ட ஆலண்ட் தீவு பகுதியில் பால்டிக் கடல் வழியே சென்றபொழுது பலத்த காற்று வீசியுள்ளது.  இதனை தொடர்ந்து மேரிஹேம் துறைமுகம் அருகே கப்பல் தரை தட்டி நின்றது.

எனினும், கப்பலில் எந்த கசிவும் ஏற்படவில்லை.  இதனால் பயணிகளுக்கு எந்த ஆபத்தும் இல்லை.  இதன்பின்னர் இன்று காலை கப்பல் துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.  இந்த சம்பவம் பற்றி விசாரணை நடந்து வருகிறது. விரைவில் பயணிகள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

331 பயணிகள் மற்றும் 98 பணியாளர்களிடையே எந்தவிதமான காயங்களும் ஏற்படவில்லை. கப்பலும் பாதுகாப்பாக உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.


No comments