அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு 3வது தடவையாக தேர்வான தமிழர்


அமொிக்க அதிபர் தேர்தல் நிறைவடைந்துவிட்டது. தற்போது விறுவிறுப்பாக வாக்கு எண்ணும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது. 

அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு மூன்றாவது முறையாக தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் பேசும் குடும்பத்தை சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ராஜா கிருஷ்ணமூர்த்தி அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு மூன்றாவது முறையாக தேர்வாகியுள்ளார். மொத்தமாக பதிவான வாக்குகளில் ராஜா 71 சதவீத வாக்குகளை அள்ளி தன்னை எதிர்த்து போட்டியிட்ட பிரஸ்டன் நெல்சன் என்பவரை அவர் தோற்கடித்துள்ளார்.

ராஜாவின் பெற்றோர் தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள் ஆவார்கள். டெல்லியில் பிறந்த ராஜா தற்போது இல்லினாய்ஸ் மாகாணத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments