வடக்கில் விஸ்வரூபமெடுக்கும் சட்டவிரோத கும்பல்கள்?மன்னார்  மாந்தை பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் படுகொலை சட்டவிரோத மண் அகழ்வு கும்பலால் மேற்கொள்ளப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.

மன்னார் - மாந்தை மேற்கு பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.விஜியேந்திரன் நேற்று செவ்வாய்க்கிழமை கடமை முடித்து வீடு திரும்பும் வழியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மாந்தை மேற்கில் இடம்பெற்றுவந்த மண் அகழ்வு உட்பட பல்வேறு சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக குரல்கொடுத்துவந்த நிலையிலேயே இவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். 

ஏற்கனவே முல்லைதீவில் சட்டவிரோக காடழிப்பு தொடர்பில் அம்பலப்படுத்திய ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தெரிந்ததே.


No comments