டக்ளஸா:கபீர்சாசிம் சஜித் சிபார்சு?ஆளும் கட்சி தமது எடுபிடியான டக்ளஸிற்கு இடம் கொடுத்து தமிழ் தரப்பையும் பிரதிநிதித்துவப்படுத்த சஜித் பிறேமதாசாவோ முஸ்லீம் தரப்பிற்குகு சந்தரப்பம் வழங்கி அதிரடி காட்டியுள்ளார்.

இந்நிலையில் 20ஆவது அரசமைப்பு திருத்தத்துக்கு அமைய, உருவாக்கப்பட்ட நாடாளுமன்ற பேரவையானது, இன்று (4) முதற் தடவையாக கூடவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், அவரது உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இந்த பேரவை கூடவுள்ளது.

சபாநாயகர் தலைமையில் கூடும் இப்பேரவையின்; ஏனைய உறுப்பினர்களாக பிரதமர், எதிர்கட்சி தலைவர், பிரதமரின் பிரதிநிதி, எதிர்கட்சி தலைவரால் நியமிக்கப்படும் உறுப்பினர் ஆகியோர் அங்கம் வகிப்பர்.

பிரதமரின் பிரதிநிதியாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்கட்சி தலைவரின் பிரதிநிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசீம் பெயரிடப்பட்டுள்ளார்.

No comments