மட்டக்களப்பில் தீ! வணிக நிலையம் எரிந்து நாசம்!


மட்டக்களப்பு காத்தான்குடி பிரதான வீதியில் அமைந்துள்ள பலசரக்கு வணிக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீயினால் வணிக நிலையம் முற்றாகத் தீப்பிடித்து

எரித்துள்ளது.

இத்தீயினால் பல கோடி பெறுமதியான பொருட்கள் எரித்து நாசமாகியுள்ளன.

தீயணைப்பு வீரர்களும், காவல்துறையினர் மற்றும் படையினர் இணைந்து தீயைக் கட்டுப்படுத்த முயன்றனர். எனினும் அதனைக் கட்டுப்படுத்த முடியாது திணறியதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த வணிக நிலையம் எரிவாயு முகராகவும் செயற்பட்டதால் அங்கிருந்த எரிவாறு கொல்கலன்கள் வெடித்துச் சிதறும் என்ற அச்சத்தினால் அப்பகுதியில் இருந்தவர்கள் வீ்ட்டை விட்டு வெளியேறியிருந்தனர் என்று மேலும் செய்திகள் தெரிவிக்கின்றன.



No comments