சாதனைகள் படைத்த ஜெட்மான் உயிரிழந்தார்!!


ஜெட் பேக்குகள் மற்றும் கார்பன் ஃபைபர் சிறகுகளைப் பயன்படுத்தி வான் சகாயம் செய்யும் 36 வயதுடைய பிரஞ்சு நாட: வீரர் வின்ஸ் ரெஃபெட் பயிற்சியின் போது விபத்தில் உயிரிழந்தார்

இவர் வானிலிருந்து குதித்து பல சாதனைகள் பலவற்றைப் படைத்தவர்.

நேற்று செவ்வாய்க்கிழமை காலை துபாயில் பாலைவனம் ஒன்றில் ரெஃபெட்டின் ஜெட்மேன் தளத்தில் பயிற்சியின் போது ஏற்பட்ட விபத்தில் அவர் உயிரிழந்துள்ளார் என ஜென்மேன் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா பின்ஹப்தூர் கூறியுள்ளார்.

வின்ஸ் ஒரு திறமையான விளையாட்டு வீரர், எங்கள் அணியின் மிகவும் நேசிக்கப்பட்ட மற்றும் மதிப்பிற்குரிய உறுப்பினர். எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் அவரது குடும்பத்தினருடனும், அவருடன் அறிந்த மற்றும் பணியாற்றிய அனைவருடனும் உள்ளன என என்றார்.

No comments