அவுஸ்திரேலியாவிலும் இரண்டாவது அலை! நாடு முடக்க நிலைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது!


 மார்ச் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவல் மிக அதிகமாக இருந்தது. தற்போது குறைந்து விட்டது. ஆனால், தெற்கு ஆஸ்திரேலியாவில் பல இடங்களில் புதிய கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது.இதுவரையில் ஆஸ்திரேலியாவில் கொரோனாவின் மொத்த பாதிப்பு 27,785 பேர். இவர்களில் 25,506 பேர் குணமடைந்து விட்டனர். 907 பேர் மரணம் அடைந்துவிட்டனர். 

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் அடுத்த 6 நாட்களுக்கு நாடு முடக்க நிலைக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. தியேட்டர்கள், ஹோட்டல்கள், பள்ளி – கல்லூரிகள், சந்தைகள் உள்ளிட்டவை மூடப்படுகின்றன. அத்தியாவசிய பணிகள் மட்டுமே அடுத்த ஆறு நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியா எடுத்திருக்கும் இந்த நிலை விரைவில் பல நாடுகளுக்குப் பரவும் என்றே கணிக்கப்படுகிறது. ஏனெனில், இந்தியாவில் படிப்படியாகக் குறைந்துகொண்டிருந்த கொரோனா புதிய நோயாளிகளின் எண்ணிக்கை சற்று, மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதேபோல பிரேசிலிலும் தொடர்கிறது. மேலும், அமெரிக்காவில் தினசரி புதிய நோயாளிகளின் எண்ணிக்கை ஒன்றரை லட்சம் பேருக்கு மேல் அதிகமாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments