முன்னணி புதிய தலைவர்களிற்கு விசாரணை?

 


சிங்களத்தில் வந்த விசாரணை அறிக்கையை தமிழில் தருமாறு கேட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணி திருமலை முன்னாள் பொறுப்பாளரும் தற்போதைய உதவி பொது செயலாளருமான கண்ணன் என்றழைக்கப்படும் சிறி ஞானேஸ்வரன் மீது இலங்கை புலனாய்வு பிரிவு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.

புலனாய்வு பிரிவு விசாரணைக்கு வருமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி உதவி பொது செயலாளர் கண்ணன் என்றழைக்கப்படும் சிறி ஞானேஸ்வரன்  அழைக்கப்பட்டுள்ளதை கட்சி வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.

இவ்விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் பேசப்போவதாக கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.


No comments