பேச தயார்: மாவை - எதற்கும் தயார்: சிவாஜி?


தமிழீழ மாவீரர் தினத்தை முன்னெடுப்பது தொடர்பில் யாழ்ப்பாணத்தில்

கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளது தலைவர்கள் இன்று ஒன்று கூடி ஆராய்ந்துள்ளனர்.தேவையேற்படின் இலங்கை அரசுடன் மாவீரர் தினத்தை முன்னெடுப்பது பற்றி அனுமதி பெற பேச்சு நடத்த தயாராக இருப்பதாக தமிழரசு கட்சி தலைவர் மாவைசேனாதிராசா ஊடகங்களிற்கு  தெரிவித்துள்ளார்.

இன்றைய சந்திப்பின் பின்னராக ஊடகங்களிற்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதனிடையே எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி மாவீரர் தின நினைவேந்தலை செய்வதற்கு நாம் யாரிடமும் அனுமதிபெறத் தேவையில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார் .


No comments