பாம்பு என்ன பாம்பு:நீதிமன்ற படியேறிய சிவாஜி?


பாம்பு தீண்டியதால் பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் சிகிற்சை பெற்று வந்த முன்னாள் நாடாளுமன்ற மாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் வீடு திரும்பி ஒரு நாள் ஓய்வு பெற முன்னதாக இன்று பருத்தித்துறை நீதிமன்றில்  ஆஜராகவுள்ளார்.

நேற்றைய தினம் பருத்தித்துறை நீதிமன்றிலிருந்து கிடைக்கப்பெற்ற அழைப்பாணையின் பேரில் அவர் இன்று நீதிமன்றில் ஆஜராகவுள்ளார்.

கடந்த இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவிலும், கண்காணிப்பு நிலையிலும் இருந்து சிகிற்சை பெற்றுவந்த சிவாஜிலிங்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்ப மருத்துவ நிர்வாகத்தினரால் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இதனிடையே மன்னார் மற்றும் முல்லைதீவிலும் சிவாஜிலிங்கம் நினைவேந்தல்களில் பங்கெடுக்க தடை உத்தரவு பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments