காரைநகரில் பாடசாலையிற்கு விடுமுறை? கொரோனா தொற்றாளி அடையாளம் காணப்பட்டதனையடுத்து காரைநகரில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுவருகின்றது.அதன் தொடர்ச்சியாக காரைநகர் இந்துக் கல்லூரியை 3 நாள்கள் மூடுமாறு வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல். இளங்கோவன் அறிவித்துள்ளார்.

‘வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரனின் ஆலோசனைக்கு அமைய நாளை திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரை 3 நாள்களுக்கு மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் கொரோனா தொற்றுள்ள ஒருவர் கண்டறியப்பட்ட நிலையில் அவருடன் நெருக்கமாகப் பழகிய ஆசிரியர் ஒருவர், காரைநகர் இந்துக் கல்லூரியில் கற்பிக்கின்றார். அவர் கடந்த வாரம் பாடசாலைக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில் அவருக்கு புதன்கிழமை பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளது. அன்று அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்தால் மறுநாள் வியாழக்கிழமை பாடசாலை ஆரம்பிக்கப்படும்’ என்று வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.

No comments