பொதுஜனபெரமுன: நாடாளுமன்றில் வெற்றி: பதியத்தலாவையில் தோல்வி!

 


இலங்கை அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட 2021ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டது.

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று (21) மாலை நடைபெற்றது. அதில், பட்ஜெட்டுக்கு ஆதரவாக 151 வாக்குகளும் எதிராக 52 வாக்குகளும் அளிக்கப்பட்டன

இதனிடையே பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் பதியத்தலாவை பிரதேசசபையின் வரவு- செலவுத்திட்டம் (பட்ஜெட்) 11 வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது.

2020 வருடத்துக்கான பதியத்தலாவ பிரதேச சபையின் வரவு- செலவுத் திட்டமே இவ்வாறு தோல்வியடைந்துள்ளது.

22 உறுப்பினர்களைக் கொண்ட இந்த பிரதேச சபை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் உள்ளது.

வாக்கெடுப்பில் 11 பேர், பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களித்தனர். இதனால், அந்த பிரதேச சபைக்கான பட்ஜெட் தோல்வியடைந்துள்ளது,


No comments