இலங்கை நீதித்துறை:பௌத்த பேரினவாதத்தின் எச்சமா?விடுதலைப்புலிகள் இலங்கை நீதித்துறையினை ஒரு நாட்டின் நீதித்துறையெ கவனத்தில் கொண்டிருந்த போதும் அதனை ஒரு பொருட்டாக மதித்ததில்லை.

ஆனாலும் 200 முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னராக ஒரு கும்பல் இலங்கை நீதிமன்றில் படியேறி நீதி பெறலாமென்ற மாயை தமிழ் மக்களிடையே விதைத்து வருகின்றது.

ஏனினும் தோல்வியிலேயே முடிவடைந்த அவர்களது முயற்சியை பற்றிய அலசல் இது

1.மாமனிதர் ரவிராஜ் படுகொலை வழக்கில் நீதிமன்ற ஜுரர்களின் ஏகமனதான முடிவின்படி, குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டனர்

2. திருகோணமலை குமரபுரம் பகுதியில் 24 பொதுமக்களை படுகொலை செய்த வழக்கில் பிரதிவாதிகளைக் குற்றவாளிகளாக நிரூபிப்பதற்கு போதுமானளவு ஆதாரங்களை முன்வைக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்து சாட்சிகளால் அடையாளம் காணப்பட்டிருந்த இராணுவ உறுப்பினர்கள் 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர் .

3. திருகோணமலை 5 மாணவர்கள் படுகொலை வழக்க்கில் குற்றம் சாட்டப்பட்ட 13 இராணுவ வீரர்களும் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டனர்

4. அக்சன் பாம் என்ற சர்வதேச அரசசார்பற்ற நிறுவன பணியாளர்கள் 17 பேர் படுகொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சகல இராணுவ வீரர்களும் போதிய ஆதாரங்கள முன்வைக்கத் தவறியதாக சொல்லப்பட்டு விடுவிக்கப்பட்டனர்

5. எழுதுமட்டுவாள் பகுதியில் ஆசைப்பிள்ளை ஏற்றம் என சொல்லப்படுகிற இடத்தில இலங்கை ராணுவம் 71 வயதான ஒரு அம்மாவின் 54 ஏக்கர் நிலப்பரப்பை அபகரித்து 52 பிரிவின் தலைமையகம் அமைத்து இருக்கிறார்கள். இது தொடர்பாக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த வழக்கில் , குறித்த அம்மாவின் காணிகளை இராணுவத்திடம் இருந்து பெற்று கொடுக்க நீதிமன்றம் மறுத்து விட்டது.

6. செம்மணி புதைகுழி தொடர்ப்பன ஆட்கொணர்வு மனு தொடர்ப்பன வழக்குகளை தாக்கல் செய்த தமிழ் சட்டத்தரணிகள் இலங்கை இராணுவ புலனாய்வு துறையால் நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்தே அச்சுறுத்தப்பட்டார்கள் . குற்றம் சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்காக நல்லாட்சி அரசாங்கத்தின் சட்டமா அதிபர் திணைக்களமே வாதாடியது .இறுதியில் அந்த வழக்கை தொடர்ந்த கலாநிதி குருபரன் சட்டத்தொழில் செய்யமுடியாது என நல்லாட்சி அரசாங்கதால் தடை செய்யப்பட்டார்

7. யாழ்ப்பாண பல்கலை துணைவேந்தர் இலங்கை இராணுவத்திற்கு எதிரான தமிழமுதம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என குற்றம் சாட்டப்பட்டு நல்லாட்சி அரசாங்கத்தால் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் . இதற்க்கு எதிராக துணைவேந்தர் தாக்கல் செய்த வழக்கு தூக்கி வீசப்பட்டது

8. நாவற்குழி விகாரைக்கு என ஒதுக்கப்பட்ட காணி தொடர்பான வழக்கில் தமிழ் தரப்பு வழக்கை வாபஸ் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது

9. திருகோணமலை மாவட்டம் கல்லடி பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த புதிய நெல்லியம்மன் ஆலயம் தீக்கிரையாக்கப்பட்டு அழிக்கப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிங்களவர் விடுவிக்கப்பட்டு அந்த வழக்கு கை விடப்பட்டு விட்டது

10. வலி வடக்கு காணி அபகரிப்பு தொடர்பான வழக்கு பல ஆண்டுகளாக நிலுவைகளாக இருக்கின்ற போதும் அந்த பகுதியில் மட்டும் 40 இராணுவ முகாம்கள், 03 பௌத்த மத வணக்க தளங்கள், 04 உணவு விடுதிகள் ரூ தங்ககங்கள், 03 இலங்கை பொலிஸ் இற்கு சொந்தமான நிறுவனங்கள் என அந்த பகுதியே முழுமையான இராணுவ வலயமாக்கப்பட்டு இருக்கிறது. நீதிமன்றத்தால் எதுவும் செய்ய முடியவில்லை

11. முல்லைத்தீவு மாவட்டம் செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் பௌத்த துறவி ஒருவரின் இறுதி கிரியை நடத்த நீதிமன்றம் மறுத்த போதும் நீதிமன்ற கட்டளையை மீறி இறுதி கிரியைகள் நடத்தப்பட்டன . மாவட்ட நீதிமன்றத்தால் இன்று வரை எதுவுமே செய்ய முடியவில்லை

12. கன்னியா வெந்நீர் ஊற்று பகுதியில் உள்ள பிள்ளையார் கோவில் வளாகத்தை உரிமை கோரி தொல்லியல் திணைக்களத்திற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தொல்லியல் திணைக்களம் கன்னியா வெந்நீர் ஊற்று பகுதிக்கு பயணம் செய்யும் சுற்றுல்லா பயணிகளுக்கு நுழைவு சீட்டு விற்க நீதிமன்றம் இன்று வரை அனுமதி வழங்கி இருக்கிறது .

13. முல்லைத்தீவு , வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் சிங்கள மீனவர்கள் அத்துமீறி வாடிகள் அமைத்து கடற்தொழிலில் ஈடுபடும் கொடூரங்களுக்கு எதிராக முன்வைக்கபட்ட முறைபாடுகளுக்கு எதிராக நீதிமன்றங்களால் நிலையான நீதியை பெற்று கொடுக்க முடியவில்லை

14. காணாமல் போனோர் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட எந்தவொரு ஆட்கொணர்வு மனு மீதும் இலங்கை நீதிமன்றங்கள் திடகாத்திரமான முடிவுகளை எடுக்க வில்லை

15. மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்தன தேரர் அவர்களின் சிவில் நிருவாக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள் , இனவிரோத நடவடிக்கைகள் என எதற்கு எதிராகவும் நீதிமன்றங்கள் கட்டளைகளை இதுவரை பிறப்பிக்கவில்லை


இங்கே சட்டவிரோத குடியேற்றங்கள், அரசியல் படுகொலைகள், சட்டவிரோத பௌத்தமயமாக்கல், காணி அபகரிப்புகள், நினைவேந்தல்களுக்கான அனுமதி போன்ற தமிழ் தேசிய பிரச்சனைகளை சட்ட ரீதியாக அணுக தமிழ் தரப்பு முயற்சிப்பது தவறு என வாதிடுவது எங்கள் நோக்கம் அல்ல.அதே நேரம் இந்த முயற்சிகளை எடுக்கும் தமிழ் சட்டத்தரணிகளின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடுவதும் அவசியமில்லாதது என நம்புகிறோம்


ஆனால் இலங்கைத் தீவானது தேரவாத பௌத்தத்தின் தெய்வீகக் கொடையென்றும் சிங்கள இனத்திற்கே உரித்தான சொத்துடைமை என்றும் மகாவம்சம் திரித்துவிட்ட புனைகதையிற் ஆட்சி பீடங்கள் மட்டுமின்றி இலங்கை நீதித்துறையே சிக்குண்டு கிடக்குறது என்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். வெறுமனே சட்ட துணை கொண்டு எங்கள் அரசியல் சார் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என நாங்கள் நம்பி கொண்டு இருக்க வேண்டியதில்லை


அண்மைய காலங்களில் தமிழ் தேசிய அரசியல் பிரச்சனைகளை வெறும் சட்ட பிரச்சனைகளாக நாங்கள் அணுகப்பார்க்கிறோம்.இதனால் தான் நாங்கள் தொடர்ச்சியாக தோல்வியடைந்து வருகிறோம். ஆகவே அரசியல் ரீதியான பிரச்சனைகளுக்கு சட்ட ரீதியாக தீர்வுகளை காண முயற்சிப்பதோடு மட்டும் நின்று விடாது அரசியல் ரீதியாகவும் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகளை தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும் கையாளுவதற்கான பொறிமுறைகளை நாங்கள் உருவாக்க வேண்டும்


No comments