கிளிநொச்சி கனகபுரத்திற்கும் இலங்கை பொலிஸ்!


தமிழீழ மாவீரர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லம் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தலைமையில் துப்புரவு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் வருகை தந்து விசாரணைகளை நடத்தியுள்ளனர்.

இது பற்றி தகவல் வெளியிட்டுள்ள கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியதாக இலங்கை பொலிசார் மீது குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

கிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்ட எம்பி மற்றும் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட குழுவிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

மாவீரர் நாள் நிகழ்வுகளுக்கான சிரமதானப் பணி இன்று (15) காலை 9 மணி முதல் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது அங்கு சென்ற கிளிநொச்சி பிராந்திய பொலிஸ் அதிகாரி உட்பட்ட பொலிஸார் சிரமதானப் பணியில் ஈடுபட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர்.


No comments