ஊரடங்கு இல்லை:நிவாரணம் உண்டு?


இலங்கை சுகாதார அமைச்சு கொரோனா தொற்றை தடுக்க இதுவரை ஒரு வெண்டிலேற்றரை கூட வாங்கவில்லையென்ற குற்றச்சாட்டை சஜித் தரப்பு முன்வைத்துள்ள நிலையில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம்  7.3 பில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளதென அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.


திவுலப்பிட்டிய பிரதேசத்தில் கொரோனா வைரஸ், மீண்டும் பதிவானதன் பின்னர் இந்தக் காலப்பகுதி வரை, மேற்படி இரண்டு  அலுவல்களுக்காக இத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளதென அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,


சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்காக நிவாரணப் பொதிகளை வழங்குதல் மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் குறைந்த வருமானத்தைக்கொண்ட


குடும்பங்களுக்கு 5,000 ரூபாய் நிவாரணத்தை வழங்குதல் போன்ற நிவாரண நடவடிக்கைகளுக்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்து.


No comments