திட்டம் போடும் யாழ்.வணிகர் கழகம்?


யாழ் நகரில் மக்களின் ஒன்றுகூடலை தடுக்கும் முகமாக வீட்டிலிருந்து  பொருட்களை கொள்வனவு செய்ய யாழ்  வணிகர் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.  

யாழ் நகரில் பொதுமக்களின் ஒன்றுகூடலை தடுக்கும் முகமாக சார்பான வணிகர் கழகத்தினரின் ஏற்பாட்டில் வீடுகளிலிருந்து பொருட்களை கொள்வனவு செய்யும்  நடைமுறை  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் தலைவர் ஜெயசேகரன்தெரிவித்தார்  ர்.

தற்போது கொரோனா தாக்கத்தின் எதிரொலியாக வட மாகாணத்திலும் இந்த கொரோனாத் தாக்கம் அதிகரித்துக் கொண்டு வருகின்ற காரணத்தினால் நகரத்திற்கு வரும் பொதுமக்களை இயன்ற அளவு குறைக்குமாறு சகல தரப்பினரும் கேட்டுக்கொள்கிறார்கள் 

குறிப்பாக பஸ் போக்குவரத்து தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது எதிர்காலத்தில் சில வேளைகளில் தொடர்ந்து இன்னும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படலாம் அதே நேரத்தில் யாழ்ப்பாண நகரத்திலுள்ள வர்த்தக நிலையங்கள் இயல்பாக இயங்கிக் கொண்டு இருக்கின்றது ஆனால் அங்கே வருகின்ற பொதுமக்களின் அளவை இயன்ற அளவு குறைக்குமாறு நாங்கள் வர்த்தகர்களை கேட்டிருக்கின்றோம். 

அதேபோல்அதிகளவில் மக்கள் கூடாமல் இருக்குமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கின்றோம் அதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள்,உணவுப் பண்டங்கள் மற்றும் உணவகங்களில் இருந்து உணவுகள் தேவைப்படும் பொதுமக்கள் நீங்கள்  வியாபார நிலையங்களில் தகவல்களை உங்களுக்கு வழங்க இருக்கிறோம் விரும்பினால் நீங்கள் உங்கள் வீடுகளிலிருந்து குறித்த கடைகளுடன் தொடர்பு கொண்டு தங்களுக்கு தேவையான உணவுப் பண்டங்கள் மற்றும் ஏனைய அத்தியாவசிய பொருட்களை நீங்கள் வீட்டில் இருந்தவாறே பெற்றுக்கொள்ளமுடியும்.

தற்கால சூழ்நிலையில் இவ்வாறான செயற்பாட்டின் மூலம் நகரின் மத்தியில் மக்களின் ஒன்றுகூடலை தடுக்கும் முகமாக யாழ்  வணிகர் கழகத்தினரால் குறித்த முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளப் பட்டுள்ளது எனவே பொதுமக்கள் இந்த சேவையினை  பயன்படுத்திக் கொள்ள முடியும் என வர்த்தக சங்க தலைவர் தெரிவித்தார்.

No comments