வாழைச்சேனையில் மோதல்! இருவர் காயம்! 15 பேர் கைது!

வாழைச்சேனை பிரதேச கருங்காலிச்சோலை பேத்தாழையில் இரு கோஸ்டிகளுக்கிடையே இடம்பெற்ற மோதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் 15 பேர் கைது காவல்துறையினரால் செய்யப்பட்டுள்ளர்.

கருங்காலிச்சோலை ஸ்ரீ நாகதம்பிரான் ஆலய நிர்வாகம் தொடர்பாக இரு குழுக்கிடையே நீண்டகாலமாக நிலவி வந்த முறுகல் நிலையே நேற்று இரவு திங்கட்கிழமை இரவு குழு மோதலாக மாறியது. அத்துடன் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை கைகலப்பாக மாறியது. பிரச்சினைக்குரியவர்களின் வீடுகளுக்கு மற்றொரு தரப்பு கற்களைக் கொண்டு வீசியுள்ளனர்.

கைது செய்யப்பட்டு வாகனத்தில் அழைத்துச் சென்றபோது காவல்துறையினரின் வாகனம் மீதும் கல் வீச்சு நடத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

No comments