யாழ்.பல்கலை:துணைவேந்தர் தாக்கினாரா?


யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் மாணவர்களிற்குமிடையே ஏற்பட்ட முரண்பாடு பேச்சுக்களையடுத்து தற்காலிக முடிவை எட்டியுள்ளது.

நாளை மாலை; பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் தவிர்ந்த பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்கள் மூலம் விசாரணைகள் நடத்த துணைவேந்தர் சம்மதித்ததையடுத்து மாணவர்கள் போராட்டத்தை விலக்கிக்கொண்டனர்.

இன்று நடைபெற்ற சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்துவதாக பல்கலைக்கழக துணைவேந்தர் சிறீசற்குணராஜா உறுதியளித்ததன் பிரகாரம் மாணவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

யாழ்.பல்கலைக்கழக 2ம் வருட, 3ம் வருட மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற முறுகல்நிலை தொடர்பாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தெரிவித்து சுமுகமாக தீர்ப்பதற்காக சில தரப்புக்கள் முயற்சித்pருந்தன.

அப்போது துணைவேந்தர், விரிவுரையாளர்கள் சிலர் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்; இணைந்து தம் மீது தாக்குதல் நடத்தியதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குறிப்பாக துணைவேந்தர் தாக்குதல் நடாத்தியதால் தனது கழுத்தில் காயம் ஏற்பட்டதாக கூறி மாணவன் ஒருவன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளான்.

இதனை தொடர்ந்து பல்கலைக்கழக நுளைவாயிலை மறித்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்திருந்தனர்.

இதேவேளை பல்கலைக்கழகத்திற்குள் அதிரடிப்படை மற்றும் காவல்துறையினை தருவித்து மாணவர்களை சுடுவோம் என துணைவேந்தர் அச்சுறுத்தியதாக மாணவர்கள் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சம்பவத்தையடுத்து யாழ்.பல்கலைக்கழக சுற்றாடலில் காவல்துறையினர்; குவிக்கப்பட்டிருக்கிந்தனர்.

எனினும் இரவு மாணவ தலைவர்களுடன் துணைவேந்தர் நடத்திய பேச்சுக்களையடுத்து மாணவர்கள் முற்றுகை போராட்டத்தை விலக்கியுள்ளனர்.


No comments