அன்னத்தை ஆதரித்து பாவம் தேடினோம்:சிவாஜி!சிறுவன் பாலச்சந்திரனுக்கு பிஸ்கட் கொடுத்து கொலை செய்தவர்களை அன்னச் சின்னத்தில் ஆதரித்ததன்  விளைவை இன்று தமிழ் மக்கள்  அனுபவிக்கின்றனர் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

யாழ் ஊடக அமையத்தில் வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழ் மக்கள் மூன்று தடவை அன்னச் சின்னத்திற்கு  வாக்களித்ததான் அனுகூலத்தை சரத் பொன்சேகா சிறுவன் பாலச்சந்திரன் தொடர்பில் தெரிவித்த கருத்து தமிழ் மக்களுக்கு சிறந்த பாடத்தை புகட்டி உள்ளது.

இறுதி யுத்தத்தின் போது உயிருடன் ராணுவத்தின் பிடியில் இருந்த சிறுவன் பாலச்சந்திரனுக்கு உண்பதற்கு பிஸ்கட் வழங்கியவர்கலே பின்னர் கொடூரமாக கொலையும் செய்தனர்.

தமிழருக்கு எதிராக  இனப்படுகொலைகளை புரிந்து போர்க் குற்றவாளிகளாக காணப்படும் ராஜபக்சககள் அவர்களுடன் சரத் பொன்சேகாவும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்

போர்க் குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கு தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் ஓரணியில் நின்று ஐநா பாதுகாப்பு சபையில் தீர்மானத்தை நிறைவேற்றி சர்வதேச நீதிமன்றத்திற்கு பாரப்படுத்துவதற்கான சர்வதேச வழிமுறைகளை ஓரணியில் நின்று செயற்படுத்த வேண்டும்.

கேவலம் சிறுவன் ஒருவரை படையணியை வழிநடத்தியவர் எனக்கூறும்  பீல்ட் மார்ஷல்  சரத் பொன்சேகா அப்பதவிக்கு தகுதியுடையவர் என்ற கேள்வியும் எழுகின்றது.

சிறுவர்களை கொலை செய்துவிட்டு  சிறுவர் படையணிகளை தலைமை தாங்கியவர்கள் எனக் கூறுவோர் இறுதிப்பரின் போது தாயின் கருவறையிலே கொலை செய்தவர்களை  சிசு படையணியில் இருந்தார்கள் எனக் கூறுவார்கள்.

ஆகவே இறுதி யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு எதிராக செயற்பட்ட இன வெளியர் பொன்சேகா பாலச்சந்திரன் தொடர்பில் தெரிவித்த கருத்திற்கு மன்னிப்பு கேட்காவிட்டால் இவரை

 தமிழர் பகுதிகளுக்கு வர விடாமல் தடுப்பதோடு அவர் சார்ந்த கட்சியினை தமிழ் தேசியம் சார்ந்த காட்சிகள் ஓரணியில் நின்று புறக்கணிக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments