கோணேஸ்வரத்தில் ஒருவர் பலி!


திருகோணமலை கோணேஸ்வரர் ஆலய வளாகத்திலிருந்து நபரொருவர் விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. உவர்மலை பகுதியைச் சேர்ந்த ஏ.செந்தூரன் (38 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த நபர் உந்துருளியில் வருகை தந்த நிலையில் கோணேஸ்வரர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள கற்பாறையிலிருந்து விழுந்து சிக்குண்ட நிலையில் உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளார்.

சடலம் தற்பொழுது மீட்கப்பட்டு திருகோணமலை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

No comments